கல்லறைத் தோட்டமாக மாறிய ஹார்ட் தீவு !!!

 மனிதனாக பிறந்த அனைவருக்கும் மரணம் இயல்பானது. ஆனால் தற்போது கொடிய நோயான கொரோனாவால் லட்சக்கணக்கான மனிதர்கள் மரணத்துள்ளார்கள். இந்த நோய் வளர்ந்து வரும் நாடு மட்டுமில்லமால் வளர்ந்த நாடுகளையும் விட்டுவைக்கவில்லை. சர்வ பலம் கொண்ட நாடாக தன்னை கருதும் அமெரிக்காவும் கொரோனாவால் அதிகம் பாதிப்புக்குள்ளகியுள்ளது.


அந்நாட்டில் செத்து விழும் மனிதர்கள் கொத்து கொத்தாக புதைக்கப்படுகிறார்கள். அமெரிக்காவின் நியூயார்க் அருகில் உள்ளது ஹார்ட் தீவானது 131 ஏக்கர் பரப்பளவுள்ள இந்தத் தீவு தான் தற்போது கொரோனாவால் சாகும் மனிதர்களது பிணங்களை புதைக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. 1869 முதல் தற்போது வரை பத்து லட்சம் பிணங்கள் ஹார்ட் தீவில் புதைக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. 

 

தீவின் முதல் பொதுப் பயன்பாடு 1864 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் வண்ணப் படையினருக்கான பயிற்சித் தளமாக இருந்தது. அப்போதிருந்து, ஹார்ட் தீவு ஒரு யூனியன் உள்நாட்டுப் போர் சிறை முகாம், ஒரு மனநல நிறுவனம், காசநோய் சுகாதார நிலையம், வீடற்றவர்கள் தங்குமிடம், சிறுவர்களின் சீர்திருத்தம், சிறை மற்றும் போதை மறுவாழ்வு மையம். ஒரு பொழுதுபோக்கு பூங்கா போன்ற பல கட்டமைப்புகள் ஹார்ட் தீவுக்கு திட்டமிடப்பட்டிருந்தன ஆனால் அவை கட்டப்படவில்லை. பனிப்போரின் போது, ​​நைக் பாதுகாப்பு ஏவுகணைகள் ஹார்ட் தீவில் நிறுத்தப்பட்டன.
1980 - 90’களில் அமெரிக்காவில் எயிட்ஸ் நோயால் பலர் உயிரிழந்தனர். எயிட்ஸ் நோய் குறித்து பெரியளவில் விழிப்புணர்வு எட்டப்படாத அச்சமயத்தில் அந்நோயால் இறந்த பலரும் ஹார்ட் தீவில் புதைக்கப்பட்டனர். எயிட்ஸ் நோயால் இறந்தவர்களின் கல்லறையானது ஹார்ட் தீவின் இணைய தளத்தில் சிவப்பு நிறத்தில் குறிக்கப்பட்டிருக்கிறது. அப்பகுதிக்குள் நுழைய தற்போது வரை யாருக்கும் அனுமதி இல்லை.

 

1985-86 எயிட்ஸ் நோயால் இறந்தவர்கள் தனித் தனி கல்லறைகளில் அங்கு புதைக்கப்பட்டனர். அச்சத்தின் காரணமாக 14 அடி வரை ஆழமாக குழி தோண்டப்பட்டு எயிட்ஸ் நோயாளிகளை புதைத்தனர். 1992’ல் புகைப்படக் கலைஞர்கள் ஜோயில் ஸ்ட்ரன்பீல்டு மற்றும் மெலிண்டா ஹண்ட் ஆகியோர் ஹார்ட் தீவில் புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்பட்டனர். எயிட்ஸ் நோயால் இறந்து போன நியூயார்க்கின் முதல் குழந்தை ஹார்ட் தீவில் புதைக்கப்பட்டது. அதையும் அப்புகைப்படக் கலைஞர்கள் புகைப்படமெடுத்தனர். 


2014 வரை அத்தீவில் குடிமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. உரிமை கோரப்படாத கேட்பார் அற்றுப் போகும் பிணங்களே இத்தீவில் புதைக்கப்படும். நவம்பர் 14, 2019 அன்று நியூயார்க் நகர சபையானது ஹார்ட் தீவை பொதுமக்கள் பார்வையிடவும், வந்து போகவும் ஒரு பூங்கா அமைக்கலாம் என பரிந்துரைத்தது. 


அத்தீவின் 150 ஆண்டு கால தடைகள் கடந்த ஆண்டு டிசம்பர் 4ம் தேதியுடன் முடிவுக்கு வந்த நிலையில் ஹார்ட் தீவை பொது மக்கள் பார்வையிட ஜூலை 1, 2021 முதல் அனுமதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போதைய சூழலில் கொரோனாவால் உயிரிழப்போர் பலரும் அங்கு கொத்து கொத்தாக புதைக்கப்பட்டு வருகின்றனர். ஒரு நாளைக்கு 25 பிணங்கள் வரை அங்கு புதைக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஹார்ட் தீவின் அதிகாரப் பூர்வ இணையதளத்தில் அந்நிலம் குறித்த பல தகவல் கிடைக்கின்றன. கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு புதைக்கப்பட்டவர்களில் 50,000-க்கும் அதிகமானோரின் விவரங்கள் அந்த இணைய தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இறந்தவர்கள் தீவின் எந்தப் பகுதியில் புதைக்கப்பட்டுள்ளார்கள் என்ற விவரமும்அதில் கிடைக்கிறது. பிணங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் எண்ணைக் கொண்டு நாம் அந்த இணைய தளத்தில் விவரங்களைப் பெறலாம் என்றாலும் பலரது பிணக்குறியீட்டு எண் இங்கு புதைக்கப்பட்டிருப்பது அநாதைப் பிணம் என்றே அறிவிக்கிறது.


David Lang இசையில் உருவான பாடலொன்று ஹார்ட் தீவின் இணைய தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. just என்ற அப்பாடலின் வரிகள் ஒவ்வொன்றும் இதுவரை வாழ்க்கை மீது உங்களுக்கு இருந்த ஆணவ அபிமானத்தை மாற்றும் அளவிற்குள்ளது. “Loneliness in a beautiful place” என்ற வரி அந்த பாடல் வீடியோவில் சேர்க்கப்பட்டிருக்கிறது. ஆம் தனிமை அழகானது தான். தற்போது உலகை அச்சுறுத்தும் கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளவும் கூட கொஞ்ச காலம் தனிமை வைத்தியம் நமக்கெல்லாம் தேவைப்படுகிறது.