கிராமங்களில் வாழ்பவருக்கும் இன்னும் அலாரமாக இருப்பது இதன் ஒளிதான். கீச் கீச் என்ற அந்த இசையை கேட்டு விழிக்கையில் இதமாகவும், புத்துணர்வுடனும் அந்த நாள் தொடங்கும். ஆனால் தற்போதைய சூழலில் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்கிறது. மேலும் இவை மனிதனுடன் ஒத்து வாழும் உயிரினமாகவே இருக்கிறது .
சிட்டுக்குருவிகள் உயரத்தில் சிறியதாகவே இருக்கும். இது 14 முதல் 15 செ.மீ நீளமாக இருக்கும். இதன் எடை 24 முதல் 39 வரை இருக்கும்.சிட்டுக் குருவிகளின் நிறம் பழுப்பு,சாம்பல்,மங்கலான வெண்மை போன்ற நிறங்களில் காணப்படும். ஆண் பறவைகளில் இருந்து பெண் பறவை நிறத்தில் வேறுபட்டு காணப்படும். சிட்டுக் குருவியில் 25 இனங்கள் உள்ளன. இதன் பூர்வீகம் பெரும்பகுதி ஐரோப்பா, மத்தியத்தரைக்கடல் பகுதிகள் மற்றும் பெரும்பகுதி ஆசியா ஆகும். இது மனிதனால் வேண்டுமென்றோ அல்லது விபத்தாகவோ ஆத்திரேலியா, ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்கக் கண்டங்களின் பெரும்பகுதிகளுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக சிட்டுக்குருவி உலகிலேயே அதிகபட்சமாகப் பரவிய காட்டுப் பறவையாக உள்ளது.
சிட்டுக் குருவிகள் நம் மனித சமூகத்துடன் ஒட்டி வாழும் பறவையாகும். இது மாடம்,பரண் மற்றும் ஓடுகளின் இடையில் கூடு கட்டி வாழும். இப்போது அடிக்கடி கட்டடங்களின் உட்பகுதியிலும் வாழ்கிறது. குறிப்பாக தொழிற்சாலைகள், கிடங்குகள் மற்றும் மிருகக்காட்சி சாலைகள் ஆகிய இடங்களிலும் வாழ்கிறது.
சிட்டுக்குருவிகள் கம்பு,கேழ்வரகு, திணை,சாமை சிறுதனியங்களை அதிகம் உண்ணுகின்றன. தற்போதைய சூழலில் ,இதுபோன்ற உணவு வகைகள் அதிகமாக கிடைப்பதில்லை . மேலும் சிட்டுக்குருவிகள் உணவு தானியங்களை தவிர புழு, பூச்சி, வெட்டுக்கிளிகள் போன்ற விளைச்சலைப் பாதிக்கும் பூச்சிகளை உண்னும் ஆனால் வயல் வெளிகளில் பூச்சி மருந்து தெளிப்பதால்,சிட்டு குருவிக்கு உணவான பூச்சியினங்களும் தற்போது கிடைப்பதில்லை இதுவும் சிட்டு குருவி அழிவதற்கான காரணமாக அமைகிறது.
சிட்டுக்குருவி பொதுவாக நான்கு அல்லது ஐந்து முட்டைகளை இடுகின்றன. எனினும் 1 முதல் 10 முட்டைகள் வரையிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன.பெண் குருவி முட்டைகளை அடைகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆண் உதவுகிறது, ஆனால் உண்மையில் முட்டைகளை மறைக்கிறதே தவிர அடைகாப்பதில்லை. இந்த காலத்தில் பெண் குருவி முட்டையை அடைகாப்பதில் இரவைக் கழிக்கிறது, அதேநேரத்தில் ஆண் கூடு அருகே நின்றுகொண்டிருக்கும். 11 முதல் 14 நாட்கள் வரை அடை காத்தப் பிறகு முட்டைகள் ஒரே நேரத்தில் பொறிக்கின்றன. விதிவிலக்காக 9 நாட்களிலும் அல்லது 17 நாட்களிலும் கூட முட்டைகள் பொறிக்கின்றன.
ஒரே ஆண்டில் பல முறை சிட்டுக்குருவிகள் முட்டையிடுகின்றன. சிட்டு குருவிகள் பெற்றோரின் மரபணுவை குறைவாகவை கொண்டிருக்கும்
சிட்டுக்குருவியின் பறத்தல் வேகமானது சராசரி வேகம் 45.5 km/h (28.3 mph) மற்றும் இது தரையில், பொதுவாக நடப்பதை விட அதிகமாக தாவுகிறது. கொன்றுண்ணிகள் துரத்தி அழுத்தம் கொடுக்கும்போது இதனால் நீந்த முடியும். வளர்ப்புப் பறவைகள் குதித்து நீரின் கீழ் குறுகிய தூரத்திற்கு நீந்தியதற்கான சில பதிவுகளும் உள்ளன.
சிட்டுகுருவிகள் இடைவிடாது பாடும் அமைப்பை கொண்டுள்ளது. இது ஆண் சிட்டுக்குருவிகள் கூடுகட்டிய பின், தங்கள் கூட்டின் உரிமையை உறுதிச் செய்யப்படுகிறது. சிட்டுக்குருவியின் சத்தம் கேட்பதற்கு இதமானது. கிராமங்களின் பின்னணி இசையே சிட்டுக்குருவி தான்.
ஊர்க்குருவி, சிட்டுக்குருவி, அடைக்கலாங்குருவி , தூக்கணங்குருவி , இராப்பாடிக்குருவி, வாற்கொண்டலாத்தி,கட்டுக்காடை ,பாற்குருவி, காட்டுள்ளான் , அக்காக்குருவி ,குயில் , கோகிலம் ,பஞ்சது ,பிகம் , வலாசகம் ,இசைக்குரற்கருவி ,களகண்டம், கொண்டலாத்தி , பாட்டாணி ,புழுக்கொத்தி ,பெருங்கொடை ,சூறைக்குருவி இன்னும் பல வகைகள் உள்ளன.
உலகின் பல பகுதிகளிலும் சிட்டுக்குருவியின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்த வீழ்ச்சிகள் முதலில் வட அமெரிக்காவில் காணப்பட்டன. இதற்கு ஆரம்பத்தில் வீட்டு பறவைகளின் பரவல் காரணம் எனச் சொல்லப்பட்டது. ஆனால் மேற்கு ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவிலும் இவற்றின் வீழ்ச்சி மிகவும் அதிகமாக இருந்தது.
கிரேட் பிரிட்டனில், 1970 களின் பிற்பகுதியில் இவற்றின் எண்ணிக்கை உச்சத்தைத் தொட்டது.ஆனால் 68% பறவைகள் ஒட்டுமொத்தமாக அழிந்துவிட்டன.சில பகுதிகளில் 90% பறவைகள் அழிந்துவிட்டன.லண்டனில், சிட்டுக்குருவி மத்திய நகரத்திலிருந்து கிட்டத்தட்ட மறைந்துவிட்டது. நெதர்லாந்தில் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை 1980 களில் இருந்து பாதியாகக் குறைந்துவிட்டது. இதனால் சிட்டுக்குருவி ஒரு ஆபத்தின் விளிம்பில் இருக்கும் இனமாகக் கூடக் கருதப்படுகிறது.
செல்போன் டவர்களில் இருந்து வெளிவரும் மின்காந்தக் கதிர்வீச்சுகளை காரணம் என்றும். நகர்ப்புற கட்டட வடிவமைப்புகளில் ஏற்படும் மாற்றங்களால் ஏற்படுகின்ற கூடு கட்டும் இடங்களின் பற்றாக்குறை ஒருவேளை ஒரு காரணியாக இருக்கலாம்.
சிட்டுக்குருவிகள் அழிந்து வருவதால் விழிப்புணர்வுக்காக ‘’உலக சிட்டுக்குருவி தினம்’’ உலகெங்கும் மார்ச் மாதம் 20ம் தேதி 2010 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது. சமீபத்திய ஆண்டுகளில், பல ஆசிய நாடுகளில் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்திருக்கிறது. இந்த சரிவு இந்தியாவில் மிகவும் தெளிவாகத் தெரிகிறது. இந்த பறவைகள் பாதுகாக்கப்படுவதற்கு, 2012 இல், சிட்டுக்குருவி டில்லியின் மாநில பறவையாக அறிவிக்கப்பட்டது.