அவுரிநெல்லி(Blueberries) என்பது ஒரு பூக்குந்தாவரம் ஆகும். இதன் கனிகள் கருநீல நிறமுடையவையாக இருக்கும்.இவை மிகவும் இனிமையான சுவை கொண்டவை ஆகும். அவை பிரபலமான சூப்பர்ஃபுட் எனப்படும்.
இதய நோய்களிலிருந்து பாதுகாக்கிறது, புற்றுநோயைத் தடுக்கிறது, இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. ப்ளூபெர்ரிகள் மிகவும் ஆக்ஸிஜனேற்ற நிறைந்த பழங்களில் ஒன்றாகும் மற்றும் மிகவும் கவர்ச்சியான பெர்ரிகளில் ஒன்றாகும். இதில், எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன.
இதில் வைட்டமின்-ஏ, வைட்டமின்-சி, வைட்டமின்-கே, நார்ச்சத்துக்கள், ஃபோலேட்சத்து, மினரல்கள், இரும்புச்சத்து, ஜிங்க், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் எலும்பு அமைப்பு மற்றும் வலிமையை உருவாக்குவதற்கும் பராமரிப்பதற்கும் பங்களிக்கின்றன. எலும்புகள் மற்றும் மூட்டுகளை பாதுகாப்பதில் துத்தநாகம் மற்றும் இரும்பு முக்கிய பங்கு வகிக்கின்றது. வைட்டமின்-கே உட்கொள்வது சிறந்த கால்சியம் உறிஞ்சுதலை மேம்படுத்துகிறது. இது கால்சியத்தின் இழப்பைக் குறைக்கும்.
ப்ளூபெர்ரியை அப்படியே பழமாகவும் சாப்பிடலாம். ஜூஸாகவும் எடுத்துக் கொள்ளலாம். ஆன்டி-ஆக்சிடண்டுகள் நிறைந்த பழங்களில் ப்ளூபெர்ரியும் ஒன்று. இது மூளையின் செயல்பாட்டைத் தூண்டுவதிலிருந்து, ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை நிர்வகிப்பது வரை தொடர்புடைய ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருக்கிறது.
ஒரு கப் பிரஷ் ப்ளூபெர்ரியில்,84 கலோரிகள் வரை நமக்குக் கிடைக்கின்றன. ப்ளூபெர்ரியில் 22 கிராம் கார்போஹைட்ரேட்டும், 4 கிராம் நார்ச்சத்தும் 0% கொழுப்புச்சத்தும் உள்ளது. இது நீரிழிவை நிர்வகிப்பதில் மிகச்சிறப்பாக செயல்படுகிறது. மேலும் உடலில் உள்ள குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்துவதோடு, இன்சுலின் சுரப்பையும் முறைப்படுத்துகிறது.
இந்த ப்ளூபெர்ரி பழம் நிறைய சர்க்கரைச் சத்து கொண்டது. இதை சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிடலாமா என்ற கேள்வி இருக்கிறது. ஏனெனில் ஒரு கப் ப்ளூபெர்ரியில் கிட்டதட்ட 15 கிராம் அளவுக்கு சர்க்கரை இருக்கிறது. ஆனால் இது ரத்தத்தின் சர்க்கரை அளவை அதிகரிப்பதில்லை. குறிப்பாக இன்சுலின் சுரப்பைத் தூண்டுகிறது. Type 2 நீரிழிவு பிரச்சினை உள்ளவர்களுக்கு ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.