சந்தனம் (sandalwood) என்பது மருத்துவப் பயன்பாடுடைய ஒரு மரமாகும். சந்தனக் கட்டையைச் சந்தனக் கல்லில் தேய்த்து வரும் சாந்தை கோடை வெப்பத்தைத் தணிக்க மார்பில் பூசிக்கொள்வது இந்திய மக்களின் வழக்கம் ஆகும் . இந்திய மரங்களில் மிகவும் விலை உயர்ந்த மரம் சந்தனமரம். இதன் தாயகம் இந்தியா ஆகும். இந்தியாவின் கிழக்குப் பகுதி காடுகளில் மிகுந்து காணப்படுகிறது. இது சுமாரான உயரத்திற்கு வளரும் இயல்பை கொண்டது.
சந்தன மரத்தில் அதிகம் பயன் தருபவை அதன் மரக்கட்டைகள் தான், சந்தன விதைகள் மருத்துவத்தில், பயன்படுகின்றன.பொதுவாக, குளிர்ச்சியை இலைகள் மூலம் வெளியிடுபவை, இதன் காரணமாக, சந்தன மரங்கள் அடர்ந்து வளரும் இடங்களில் அடிக்கடி மழைப்பொழிவு ஏற்பட்டும்.
மருத்துவப் பயனாகும் சந்தனக்கட்டைகள், துவர்ப்பு சுவையுடனும், உடலுக்கு குளிர்ச்சியையும், சிறுநீரைப்பெருக்கி, , மனதிற்கு புத்துணர்ச்சியும் தரக்கூடியதாக காணப்படும், மனிதரின் சரும வியாதிகளைப் போக்கும் மருந்தாகவும், ஆயின் மெண்டாகவும் தீக்காயங்களில் சேதமாகும் உடல் தோல் மற்றும் உறுப்புகளை காக்கும் சிகிச்சையில் மருந்தாகப் பயன்படுகிறது.
வைரம் பாய்ந்த சந்தன மரக்கட்டைகளில், எண்ணைவளம் மிகுதியாக இருக்கும், இதிலிருந்து எடுக்கப்படும், சந்தன எண்ணை அல்லது அத்தர், வெப்பத்தை தனித்து, உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கும் மருத்துவ பயன்கள் கொண்டதும், வாசனைத்திரவியங்கள், சோப் வகைகள் மற்றும் பத்திகள் செய்யப்பயன்படுகின்றன.
சந்தனத்தில் பலவகைகள் இருந்தாலும், அனைத்தும் தரத்தில் ஒன்றாக காணப்படும். ஆயினும் சந்தனம் சிவப்பு, மஞ்சள், வெண்மை என மூன்று வகைகளாக இதன் கட்டையின் நிறத்தை ஒட்டி பிரிக்கப்பட்டுள்ளன. இந்த மூன்று வகைக்கும் மருத்துவத் தன்மை ஒன்றுதான். வெட்டை சூடு குணமாக சந்தனத்தைப் பசும்பாலில் உரைத்து சுண்டைக்காய் அளவு காலை, மாலை வேளைகளில் 10 நாட்களுக்கு சாப்பிட்டு வரவேண்டும்.சந்தனம் கட்டையை, எலுமிச்சம் பழசாறில் உரைத்து பசையாக செய்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூச படர் தாமரை, வெண்குஷ்டம், முகப் பரு குணமாகும்.
கண்கட்டிகள் கரைய சந்தனக் கட்டையை எலுமிச்சம் பழச் சாற்றில் மைய அரைத்து பசைபோல செய்து கட்டிகளின் மீது பற்றுப் போட வேண்டும். இரவில் படுக்க போகும் முன்னர் இவ்வாறு செய்து கொண்டு காலையில் கழுவ வேண்டும். 5 நாட்கள் தொடர்ந்து செய்யலாம்.
சந்தனத்தை மருதாணி விதைகளில் கலந்து, சாம்பிராணி போட்டுவர, வீடுகளில், காற்று தூய்மையாகி, மனம் தெளிவுறும். சந்தனக்கட்டை எண்ணெய் போல, சந்தன விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயும் உடல் நலனுக்கு பயனாகிறது. சந்தன எண்ணெய், பக்க வாதம் மற்றும் முடக்கு வாதம் போன்ற வாத வியாதிகளுக்கு வெளிப்பூச்சு எண்ணையாகவும் உள் மருந்தாகவும் பயன் தருகிறது. உணவு செரிக்காமையால் ஏற்படும் அஜீரணக்கோளாறுகளை நீக்கி, உடலுக்கு நலம் பயக்கும், இல்லற வாழ்வில் நாட்டம் கொள்ள வைக்கும்.