விலை ₹1.70 லட்சம்
என்ஜின் 199.5cc
மைலேஜ் 35 km/l
டிரான்ஸ்மிஷன் 5 ஸ்பீடு மேனுவல்
கர்ப் எடை 166 kg
எரிபொருள் 13 l
இருக்கை உயரம் 810 mm
வண்ணங்கள் பிரண்ட் ரெட், பியூட்டர் கிரெய், ஓயிட்
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பிஎஸ்-6 வெர்ஷனுக்குட்பட்ட பல்சர் ஆர்.எஸ் 200 மாடலை ரூ. 1.45 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பழைய வெர்ஷனை விட இப்புதிய பைக் ரூ. 3000 கூடுதல் விலையை பெற்றுள்ளது.
பிஎஸ்6 பஜாஜ் பல்சர் ஆர்.எஸ் 200 மாடலில் 199.5 சிசி சிங்கிள்-சிலிண்டர், லிக்விடு கூல்டு, ஃப்யூவெல் இஞ்ஜெக்ஷன் டிடிஎஸ்-ஐ எஞ்சின் உள்ளது. இது அதிகப்பட்சமாக 24 பிஎச்பி பவர் மற்றும் 18.7 என்.எம் டார்க் திறனை வழங்கும்.
இந்த பைக்கின் எஞ்சின் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் அம்சத்துடன் கூட்டணி அமைத்துள்ளது. முந்தைய மாடலில் இருப்பது போலவே பைக்கின் முன்பக்கத்தில் டெலஸ்கோப்பிக் ஃபிரென்ட் ஃபோர்க்ஸ், பின்பக்கத்தில் கேஸ்-சார்ஜிடு மோனோஷாக் யூனிட் சஸ்பென்ஷன் தேவையை பூர்த்தி செய்கின்றன. மேலும், இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் இடம்பெற்றுள்ளன. சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் அமைப்பு ஸ்டான்டர்ட் அம்சமாக வழங்கப்பட்டுள்ளது.