Yamaha நிறுவனம் Yamaha 2023 R15 v4 மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் ரூ.1.80 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் இந்த சூப்பர்ஸ்போர்ட் பைக்கை பல புதிய அம்சங்களுடன் மேம்படுத்தியுள்ளன. 2023 Yamaha R15 V 4 பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முதல் ஐந்து விஷயங்கள் இங்கே உள்ளன.
டிசைன்
Yamaha R15 V 4 பைக்கின் டிசைன் Yamaha R சீரிஸின் மூலம் ஈர்க்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. டூயல் LED ஹெட்லைட் அமைப்பிற்குப் பதிலாக, இருபுறமும் LED DRLகளால் சூழப்பட்ட bi-LED ஹெட்லைட்டைக் கொண்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட பக்க ஃபேரிங்ஸ் மூலம், இழுவை குணகம் 0.307 இலிருந்து 0.293 ஆகக் குறைந்துள்ளது, இது முன்பை விட அதிக ஏரோடைனாமிக் திறனை உருவாக்குகிறது. இந்த பைக்கின் பின்புற பகுதி R15 V3 போலவே தொடர்கிறது.
டைமென்சன்
புதிய Yamaha R15 V4 பைக் 1990mm நீளத்தையும் 725mm அகலத்தையும் 1135mm உயரத்தையும் கொண்டு டிசைன் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த பைக் 815mm சீட் உயரத்தையும் 1325mm வீல் பேஷையும் 142kg கிரப் எடையையும் கொண்டுள்ளது. புதிய Yamaha R15 V4 பைக் 11L ஃபியூல் டேங் கெப்பாசிட்டியைக் கொண்டுள்ளது
மைலேஜ்
இந்தியாவில் Yamaha R15 V4 பெட்ரோல் வேரியண்டில் கிடைக்கிறது. Yamaha R15 V4 இன் பெட்ரோல் வகையின் சராசரி மைலேஜ் 55.2kmpl என எதிர்பார்க்கப்படுகிறது.
நிறம் மற்றும் விலை
Yamaha R15 V4 பைக் மெட்டாலிக் ரெட், டார்க் நைட், ரேசிங் ப்ளூ போன்ற நிறங்களில் கிடைக்கிறது. மேலும் இந்த Yamaha R15 V4 பைக் 1.80 லட்சத்திலிருந்து கிடைக்கிறது.