Bajaj Chetak Premium 2023 Edition எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள்

Bajaj நிறுவனம் Chetak Premium 2023 Edition எனப்படும் புதிய ரேஞ்ச்-டாப்பிங் வேரியண்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் டிசைன், பேட்டரி மற்றும் விலை பற்றி பின்வருமாறு காண்போம்.

டிசைன்

இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பெரிய வண்ண LED இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வடிவில் புத்தம் புதிய அம்சமாக சேர்க்கப்பட்டுள்ளது. புதிய வேரியண்டில் இரண்டு-டோன் இருக்கை, அதன் வண்ண ரியர் வியூ கண்ணாடிகள், சாடின் பிளாக் கிராப் ரெயில் மற்றும் பொருந்தக்கூடிய பிலியன் ஃபுட்ரெஸ்ட் காஸ்டிங் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. மேலும், ஹெட்லேம்ப் கேசிங், ப்ளிங்கர்கள் மற்றும் சென்ட்ரல் டிரிம் எலமெண்ட்கள் சார்கோல் பிளாக் நிறம் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

டைமென்சன்

2023 Chetak Premium ஸ்கூட்டர் 1,894 மிமீ நீளத்தையும், 725 மிமீ அகலத்தையும், 1,132 மிமீ உயரத்தையும் கொண்டுள்ளது. மேலும் 1,330 மிமீ வீல்பேஸுடனும் வருகிறது.

பேட்டரி

Bajaj Chetak எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 2.9kWh பேட்டரி பேக் மற்றும் 4.2kW பீக் பவரை உருவாக்கும் திறன் கொண்ட எலக்ட்ரிக் மோட்டாரைக் கொண்டுள்ளது. இப்போது இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ARAI- சான்றளிக்கப்பட்டது. ஒரு முழு சார்ஜில் 90 கிமீ கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை 4 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்ய முடியும் என்று நிறுவனம் கூறுகிறது, அதே நேரத்தில் 0- 80% சார்ஜ் 2.75 மணி நேரத்தில் செய்ய முடியும். மேலும் இந்த எலெக்ட்ரிக் மோட்டார் அதிகபட்சமாக 42 kW ஆற்றலையும் 20 Nm டார்க் திறனையும் கொடுக்கிறது. Bajaj Chetak Premium 2023 எடிசன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப் ஸ்பீடு 63 kmpl ஆகும்.

விலை

Bajaj Chetak Premium 2023 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ. 1.52 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சாடின் பிளாக், மேட் கரீபியன் ப்ளூ, மேட் கோர்ஸ் கிரே போன்ற 3 வண்ணங்களில் கிடைக்கிறது.