Suzuki Motorcycles India நிறுவனம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புதிய Hayabusa ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. 2021 Suzuki Hayabusa பைக்கின் விலை ரூ. 16.40 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், இந்தியா). மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவு இந்தியா முழுவதும் திறக்கப்பட்டுள்ளது. இத்தகைய ஸ்டைலான பைக்கின் டிசைன், என்ஜின், மைலேஜ் மற்றும் விலை பற்றி பின்வருமாறு காண்போம்.
டிசைன்
Hayabusa பைக் ஆக்ரோஷமான தோற்றத்தை உருவாக்கும் புதிய முன்பக்க ஃபேசியா உட்பட சில டிசைன்கள் அதன் முந்தைய தயாரிப்பிலிருந்து மாற்றம் பெற்றுள்ளன. புதிய Hayabusa இப்போது முழு வட்ட வடிவிலான LED லைட்டிங்கை கொண்டுள்ளது. டர்ன் இன்டிகேட்டர்கள் இப்போது ஏர் டேமுக்கு அடுத்துள்ள ஃபேரிங் மேல் பகுதியில் வைக்கப்பட்டுள்ளன.
ஃபேரிங் வடிவமைப்பு திருத்தம் செய்யப்பட்டு இப்போது மிகவும் நேர்த்தியாகத் தெரிகிறது. இது முன் ஃபேரிங்கின் முடிவில் குரோம் ஆக்சன்ஸ்களையும் கொண்டுள்ளது. பைக்கின் தோற்றம் டூயல்-குரோம்-ஃபினிஷ் செய்யப்பட்ட எக்ஸாஸ்ட்கள் மற்றும் புதிய டெயில்லேம்ப்களால் மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது.
என்ஜின்
2021 Suzuki Hayabusa பைக் இப்போது லிக்யூடு-கூல்டு, 1,340cc, இன்லைன் நான்கு சிலிண்டர் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. புதுப்பிக்கப்பட்ட இயந்திரம் இப்போது இலகுவான பிஸ்டன்கள், புதிய இணைக்கும் கம்பிகள் மற்றும் பிற மறு-பொறிக்கப்பட்ட உள் கூறுகளைக் கொண்டுள்ளது.
இது இப்போது 9,700rpm இல் அதிகபட்சமாக 190bhp பவரையும், 7,000rpm இல் அதிகபட்சமாக 150nm டார்க் திறனையும் உற்பத்தி செய்கிறது. என்ஜின் 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் மற்றும் பை டேரக்சனல் க்விக்சிஃப்டருடன் இணைக்கப்பட்டுள்ளது.
மைலேஜ்
Hayabusa சூப்பர் பைக் 21.0 லிட்டர் பியூல் கெப்பாசிட்டியைக் கொண்டுள்ளது. இது 266கிலோ கிராம் க்ரப் எடையையும் கொண்டுள்ளது. மேலும் இது 800மிமீ சீட் உயரத்தையும் கொண்டுள்ளது. இந்த புதிய Hayabusa சூப்பர் பைக் 0 முதல் 100 கிமீ வேகத்தை 3.2 வினாடிகளில் அடைந்துவிடும். மேலும் இதன் டாப் ஸ்பீடு 299 kmph ஆகும்.
புதிய Hayabusa பைக்கில் மேம்படுத்தப்பட்ட எலக்ட்ரானிக்ஸ் தொகுப்பையும் கொண்டுள்ளது. இதில் சுஸுகி டிரைவ் மோட் செலக்டர் ஆல்ஃபா மூன்று ஃபேக்டரி ப்ரீ-செட்கள் மற்றும் 3 யூசர்- டிபண்டபில் மோடுகள், மூன்று பவர் மோடுகள், மூன்று மோடுகள் கொண்ட லாஞ்ச் கண்ட்ரோல் சிஸ்டம் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் சிஸ்டம் ஆகியவை அடங்கும்.
முக்கிய அம்சங்கள்
மோட்டார்சைக்கிளில் உள்ள பாதுகாப்பு அம்சங்களில் 10 லேவல் அட்சஸ்மன்ட் கொண்ட ஸ்விட்சபில் ட்ராக்சன் கண்ட்ரோல் சிஸ்டம், ஆன்ட்டி லிஃப்ட் கண்ட்ரோல் சிஸ்டம், ஆக்டிவ் ஸ்பீட் லிமிட்டர், குறைந்த ஆர்பிஎம் அசிஸ்ட், ஒருங்கிணைந்த பிரேக் சிஸ்டம், மோஷன் ட்ராக் பிரேக் சிஸ்டம், ஸ்லோப் டிபென்டென்ட் கண்ட்ரோல் சிஸ்டம் மற்றும் ஹில் ஹோல்ட் கண்ட்ரோல் அமைப்பு ஆகியவை அடங்கும்.
மேலே உள்ள அனைத்து அம்சங்களையும் எலக்ட்ரானிக்ஸ் ரைடர் எய்ட்ஸ் கருவியின் மையத்தில் வைக்கப்பட்டுள்ள புதிய TFT டிஸ்ப்ளே மூலம் கட்டுப்படுத்த முடியும். புதிய சுவிட்ச் கியர் கியூபுடன் உள்ள புதிய டிஸ்ப்ளே, ரைடர் பல்வேறு ரைடர் உதவி விருப்பங்களுக்கு அணுக அனுமதிக்கிறது.
விலை
Hayabusa சூப்பர் பைக் 16.40 லட்சத்திலிருந்து கிடைக்கிறது. மேலும் இது க்ளோஸ் ஸ்பார்க்லி பிளாக்/கேண்டி பர்ன்ட் கோல்ட், மெட்டாலிக் மேட் வாள் சில்வர்/கேண்டி டேரிங் ரெட் மற்றும் பெர்ல் ப்ரில்லியண்ட் ஒயிட்/மெட்டாலிக் மேட் ஸ்டெல்லர் ப்ளூ போன்ற மூன்று நிறங்களில் கிடைக்கிறது.