Hero Super Splendor Xtec பைக்கின் சிறப்பம்சங்கள்

 Hero நிறுவனம் Hero Super Splendor Xtec மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் ரூ.83,368 ஆயிரம்  (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. Hero Super Splendor Xtec பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முதல் ஐந்து விஷயங்கள் இங்கே உள்ளன.

டிசைன்

Hero நிருவனத்தின் 125cc மோட்டார்சைக்கிள் இப்போது Super Splendor Xtec எனப்படும் தொழில்நுட்பம் நிறைந்த தோற்றத்தில் வருகிறது. மேலும் இந்த பைக்கில் SMS மற்றும் அழைப்பு எச்சரிக்கைகள், ட்ரிப் மீட்டர்கள், சைடு ஸ்டான்டு எச்சரிக்கைகள், குறைந்த எரிபொருள் எச்சரிக்கைகள் மற்றும் பிற தகவல்களைக் காண்பிக்கும் 5-இன்ச் TFT டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் போன்றவை உள்ளன. மோட்டார்சைக்கிளின் ஹார்டுவேரில் டெலஸ்கோபிக் முன் ஃபோர்க்குகள், பின்புறத்தில் 5-படி சரிசெய்தலுடன் கூடிய டெலஸ்கோபிக் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர்கள், 18-இன்ச் டியூப்லெஸ் அலாய் வீல்கள், 240மிமீ டிஸ்க்/130மிமீ டிரம் பிரேக்குகள் மற்றும் 130மிமீ டிரம் பிரேக் கீழே உள்ளன.

2023 ஆம் ஆண்டிற்கான Super Splendor Xtec இன் புதிய முன் டிசைன் ஆனது, தனித்தனி குறைந்த-பீம் மற்றும் உயர்-பீம் லேம்புகளுடன் புதுப்பிக்கப்பட்ட LED ஹெட்லைட் அசெம்பிளியை கொண்டுள்ளது. ஹெட்லேம்ப் அசெம்பிளியின் மையத்தில் LED DRL உள்ளன. மோட்டார்சைக்கிளின் முன் வைசர் மற்றும் ஹெட்லேம்ப் கவ்ல் இரண்டும் ஒரு தனித்துவமான தோற்றத்தை கொடுக்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. டர்ன் இன்டிகேட்டர்களில் இன்னும் ஆலசன் பல்புகள் உள்ளன. இது தற்போதைய தலைமுறைக்கு மாறாக பக்கவாட்டில் இருந்து வரும் சிம்மர் எக்ஸாஸ்ட் பைப்பைக் கொண்டுள்ளது. புதிய அழகியல், துடிப்பான வண்ணங்கள் மற்றும் 3D லோகோக்கள் மற்றும் பிராண்டிங் போன்றவை இப்போது உள்ளன.

டைமென்சன் 

புதிய Hero Super Splendor Xtec பைக் 2042mm நீளத்தையும் 752mm அகலத்தையும் 1092mm உயரத்தையும் கொண்டு டிசைன் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த பைக் 793mm சீட் உயரத்தையும் 752mm வீல் பேஷையும் 123kg கிரப் எடையையும் கொண்டுள்ளது. புதிய Hero Super Splendor Xtec பைக் 12L ஃபியூல் டேங் கெப்பாசிட்டியைக் கொண்டுள்ளது

எஞ்சின்

Hero Super Splendor Xtec பைக் 7500rpm இல் 10.87PS பவரையும் 6000rpm இல் 10.6Nm டார்க் திறனையும் உருவாக்கும் ஃப்யூல்-இன்ஜெக்ட் செய்யப்பட்ட 125cc எஞ்சின் கொண்டுள்ளது. மேலும் இந்த எஞ்சின் 5 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது ஒரு டெலஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் டூயல் ஷாக் அப்சார்பர் சஸ்பென்ஷன் அமைப்பில் இயங்குகிறது.

மைலேஜ்

புதிய Xtec மாறுபாடு OBD2-A-இணக்கமானது. ஆன்-போர்டு டயக்னாஸ்டிக்ஸ் சிஸ்டம் தோல்விகளைக் கண்டறிய உதவுகிறது மற்றும் வாகன அமைப்பில் உள்ள தவறுகளைக் குறிக்கிறது. Hero Super Splendor Xtec பைக் 55kmpl மைலேஜை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விலை

Hero Super Splendor Xtec பைக் க்ளோஸ் பிளாக், கேண்டி பிளேஸிங் ரெட், மேட் ஆக்சிஸ் கிரே போன்ற 3 நிறங்களில் கிடைக்கிறது. மேலும் இந்த Apache RTR 160 பைக் ரூ. 83,368 விலையில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.