Redmi 12C ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்

Redmi 12C ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே, கேமரா, பிராசசர் மற்றும் பேட்டரி பற்றி பின்வருமாறு விரிவாகக் காண்போம்.

டிஸ்ப்ளே

Redmi 12C ஸ்மார்போனானது 6.71-இன்ச் HD+ Dot Drop டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.மேலும் இது 60Hz refresh rate ஐயும் 120Hz touch sampling rate ஐயும் வழங்குகிறது.
கேமரா
Redmi 12C ஸ்மார்போன் 50MP முதன்மை கேமராவையும் 2MP செகன்ட்ரி கேமராவையும் பின்புறத்தில் கொண்டுள்ளது. மேலும் இது முன்புறத்தில் 5MP கேமராவை selfie கேமராவாகவும் கொண்டுள்ளது.
பிராசசர்
Redmi 12C ஸ்மார்ட்போன் 12nm கொண்ட MediaTek Helio G85 பிராசசரைக் கொண்டுள்ளது. மேலும் இது MIUI 13 based on Android 12 OS வசதியையும் கொண்டுள்ளது. 
பேட்டரி மற்றும் ஸ்டோரேஜ்
Redmi 12C ஸ்மார்ட்போன் ஆனது 5000mAh பேட்டரியையும் 10W fast சார்ஜிங் வசதியையும் கொண்டுள்ளது. Redmi 12C ஸ்மார்ட்போன் 4GB மற்றும் 6GB என இரண்டு RAM வசதியிலும் 64GB மற்றும் 128GB என இரண்டு இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதியிலும் கிடைக்கிறது.
முதன்மை நிறங்கள் மற்றும் விலை 
Redmi 12C ஸ்மார்ட்போனானது Graphite Gray, Ocean Blue, Mint Green, Lavender Purple போன்ற 4 முதன்மை நிறங்களில் கிடைக்கிறது. Redmi 12C ஸ்மார்ட்போன் 4GB RAM+ 64GB ஸ்டோரேஜ் போன் 8,999 விலையிலும் 6GB RAM+ 128GB ஸ்டோரேஜ் போன் 10,999 விலையிலும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.