Suzuki Gixxer SF பைக்கின் சிறப்பம்சங்கள்

Suzuki நிறுவனத்தின் Suzuki Gixxer SF பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முதல் ஐந்து விஷயங்கள் இங்கே உள்ளன.

டிசைன்

ஜென்ரேஷன் அப்டேட்டான Suzuki Gixxer SF பைக் முன்பை விட அதிக பிரீமியம் மற்றும் ஸ்போர்ட்டி தோற்றத்தைக் கொண்டுள்ளது. இது எட்ஜியர் ஸ்டைலிங், க்ளிப்-ஆன் ஹேண்டில்பார்கள் மற்றும் எஃபெக்ட்டை நிறைவு செய்ய ஸ்பிலிட் சீட் ஆகியவற்றை கொண்டுள்ளது. 

Suzuki Gixxer SF பைக்கானது LED ஹெட்லேம்ப், LED டெயில் லேம்ப் மற்றும் பல்ப் டர்ன் இண்டிகேட்டர்கள் ஆகியவற்றை சிறப்பான தோற்றத்தில் கொண்டுள்ளது. மேலும் இதில் உள்ள டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் மேம்படுத்தப்பட்டது. இதில் ஸ்பீடோமீட்டர், டேகோமீட்டர், ஃப்யூவல் கேஜ், கியர் பொசிஷன் இண்டிகேட்டர், ஓடோமீட்டர் மற்றும் டிரிப்மீட்டர்கள் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.

டைமென்சன் 

புதிய Suzuki Gixxer SF பைக் 2025mm நீளத்தையும் 715mm அகலத்தையும் 1035mm உயரத்தையும் கொண்டு டிசைன் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த பைக் 795mm சீட் உயரத்தையும் 148kg கிரப் எடையையும் கொண்டுள்ளது. புதிய Suzuki Gixxer SF பைக் 12L ஃபியூல் டேங் கெப்பாசிட்டியைக் கொண்டுள்ளது

எஞ்சின்
Gixxer SF பைக்கானது 155cc ஏர் கூல்டு மற்றும் ஃபியூல் இன்ஜக்டடு மோட்டாரை கொண்டுள்ளது. இந்த எஞ்சின் 8000rpm இல் 13.6PS பவரையும் 6000rpm இல் 13.8Nm டார்க் திறனையும் வெளியிடுகிறது. மேலும் இந்த பைக் 5-ஸ்பீடு கியர்பாக்ஸையும் கொண்டுள்ளது.
மைலேஜ்

Suzuki Gixxer SF பைக் 40-55 kmpl மைலேஜை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, 12 லிட்டர் எரிபொருள் டேங்க் கொண்ட இந்த பைக்கை சுமார் 400 கிமீ தூரம் வரை நிறுத்தாமல் ஓட்ட முடியும்.

நிறம் மற்றும் விலை 

Gixxer SF பைக்கானது Glass Sparkle Black, Metallic Triton Blue, Pearl Mira Red, Metallic Sonic Silver/Pearl Blaze Orange, Glass Sparkle Black, Metallic Triton Blue ஆகிய 6 வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. Suzuki Gixxer பைக் ஆரம்ப விலை 1.36 லட்சத்திலிருந்து 1.43 லட்சம் வரை இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது.